மனிதர்களுக்கு எத்தனை உடம்புகள் இருக்கின்றன ? ஒன்று என்று நீங்கள் சொல்லலாம் , அது மனித உடலை பற்றி இப்படி ஒரு சிறுபிள்ளைத்தனமான கேள்வி கேட்பது புதிரானது என்பது போல ஒலிக்கும். இருப்பினும் உண்மைமையை சொல்லவேண்டுமானால் இந்த கேள்வி வழக்கத்துக்கு மாறானது அல்ல மாறாக அது பொருள் நிறைந்தது. உதாரணமாக சூரியன் ஒன்றுதான் ஆனால் அதை சுற்றியுள்ள வெப்பம் நிறைந்த ஒளி வட்டங்கள் எண்ணிலடங்காதவை. அதே போன்று மனிதர்களாகிய நாம் வெளிப்பார்வைக்கு ஒரே ஒரு உடலை மட்டும் சுமந்து கொண்டிருக்கிறோம்,ஆனால் அதற்க்கு கீழே நமக்கு வேறொரு கண்ணுக்கு புலப்படாத உடல் ஒன்று இருக்கிறது. உங்களுக்கு அது தெரியுமா? அல்லது வேறு வழியில் கேட்பதானால் நீங்கள் அதை நம்புகிறீர்களா?
நாம் அதை விரிவாக விளக்கலாம். சிலசமயங்களில் சிலர் அருகில் இருந்தாலே நாம் காரணமில்லாமல் மகிழ்ச்சியாகவோ அல்லது கவலையாகவோ இருப்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளுவீர்களா? எங்களுக்கு தெரியும் நீங்கள் இதை ஒப்புக்கொள்ளுவீர்கள் என்று. அது ஒவ்வொரு மனித உடலை சுற்றியும் ஒரு ஒளி வட்டம் இருக்கிறது என்ற நம்பிக்கைக்கு ஒரு அங்கீகாரம் அளிக்கிறது. ஆகவே அடுத்து எழும் கேள்வியானது : இந்த கண்ணுக்கு புலப்படாத உடலுக்கு என்ன நன்மை இருக்கிறது ? அதை நாம் நன்றாக தெரிந்து கொள்ளுவதாலோ அல்லது தெரிந்து கொள்ளாவிட்டாலோ என்ன மாற்றம் விளைந்து விடப்போகிறது?
இந்த உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சுரேகா, ஒரு ஆரோக்கியமான பெண்மணி. ஒருமுறை அவருக்கு நல்லுயிர் (பயோ- வெல்) படக்கருவியை காணும் சந்தர்பம் கிடைத்தது. அது அமெரிக்காவில் (யு.எஸ்.ஏ) நடந்த ஒரு கண் காட்சியில் நடந்தது. அந்த சூழ்நிலை மிக மகிழ்ச்சிகரமாகவும் புதியவைகளை தெரிந்து கொள்வதில் அனைவரும் உற்சாகம் கொண்டவர்களாகவும் இருந்தனர். சுரேகாவும் தன்னுடைய கண்ணுக்கு புலப்படாத உடலை அங்கு படம் பிடித்துக்கொண்டார். நல்லுயிர் (பயோ- வெல்) படக்கருவி நமது கண்ணுக்கு புலப்படாத உடலை அல்லது ஒளி வட்டத்தின் உருவப்படத்தை படம் எடுக்கிறது. அது குறுக்கு இறக்கம் (காரோணல் டிஸ்சார்ஜ்) என்று அழைக்கப்படுகிறது. படம் எடுக்கப்பட்டவுடன் அந்த விற்பனை அரங்கில் இருந்த நிபுணர்கள் அதை உடனடியாக நடைமுறைப்படுத்தி அவருக்கான ஒரு அறிக்கையை தயார் செய்தனர். சுரேகா அதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் “ அந்த அறிக்கை என்ன சொல்லுகிறது?” என்று கேட்டார்.
ஒரு நிபுணர் சொன்னார் “ எல்லாம் நன்றாக இருக்கிறது. நீங்கள் ஆரோக்கியமாகவும் மனம் உவந்தும் இருப்பதை பார்க்கும் போது நான் மகிழ்ச்சியாக உணருகிறேன். உங்களால் பார்க்க முடிந்தால் இந்த ஒரு குறிப்பிட்ட இடம், நீங்கள் உங்கள் பற்களை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறது. நீங்கள் அந்த இடத்தில் வலியை உணர்ந்தால் …..”
“ஓ உண்மையாகவா? இந்த உருவப்படத்தை ஒரு முறை பார்த்து என்னுடைய பற்களின் எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்து விட்டீர்கள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை” சுரேகா அந்த அரங்கை விட்டு சீக்கிரமாகவே வெளி வந்து பின் இந்தியாவுக்கு திரும்பி விட்டார். ஆனால் ஆறிலிருந்து எட்டு மாதங்களுக்கு பிறகு என்ன நடந்தது?. அவரது பற்கள் தொந்திரவு கொடுக்கத்தொடங்கின! அதற்கு அவர் சிகிச்சையை மேற்கொள்ள தொடங்கியவுடன்தான் திடீரென அவருக்கு நினைவுக்கு வந்தது. “கோஷ்! என்னை கிர்லியன் புகைப்படம் எடுக்க நான் சென்ற பொழுது கண்காட்சியில் பார்த்த அந்த நிபுணர் இதையேதான் சொன்னார்”
அதுதான் விஷயம். உணவு தயாரிக்கும் போது அதன் நறுமணம் நம்மை வந்தடைவதில்லையா? நம்முடைய புலப்படாத உடல் இந்த மாதிரி ஒரு முறையில்தான் இயங்குகிறது. நாம் அதன் பலம் , பலவீனம் , நல்லவை, கெட்டவை அனைத்தையும் அவை வெளிப்படும் போது உணருக்கிறோம். ஆனால் இந்த அம்சங்களும் தனித்தன்மைகளும் இந்த புலப்படாத உடலின் அல்லது ஒளி வட்டத்தின் மூலம் அதற்க்கு முன்பே வெளி வரத்தொடங்குகிறது. நம் உடல் சார்ந்த விஷயங்களில் எதுவும் நடப்பதற்க்கு முன் முன்கூட்டியே நமக்கு தெரியவந்தால்.அதை எதிர்த்து போராட நம்மை தயார்ப்படுத்திக்கொள்ள முடியும், கிர்லியன் புகைப்படம் அல்லது நல்லுயிர் (பயோ- வெல்) நிழற்படம் மறைந்திருப்பதை வெளிக்கொணர உதவுகிறது அதன் மூலம் நாம் ஆரோக்கியமாக இருப்பதற்க்கும் நம்முடைய ஆரோக்கியத்தை நன்றாக பேணுவதற்க்கும் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
நல்லுயிர் (பயோ- வெல்) படக்கருவியையும் கிர்லியன் படங்களையும் உங்கள் வாழ்வில் நீங்கள் பயன்படுத்துவத்தின் மூலம் இந்த ஆச்சரியப்படத்தக்க மன அமைதியும் ஆரோக்கியமும் உங்களுக்கு சொந்தமாகிறது. ஒருவேளை நீங்கள் ஆச்சரியப்படலாம் “இப்போது இதை இந்தியாவில் எங்கே தேடுவேன்?” . நன்று இதற்கு நாங்கள் ஒரு பதிலை வைத்திருக்கிறோம் . புகழ்பெற்ற மருத்துவர் ஜெ.எம்.ஷா அவர்களுக்கு நன்றி . இதைப்பற்றி மேலும் அதிகமாக அடுத்த கட்டுரையில் உங்களுக்கு தெரிவிக்கிறோம். தொடர்ந்து வாசித்துக்கொண்டிருங்கள் நண்பர்களே!
கிர்லின் நிழற்படம் மற்றும் நல்லுயிர் (பயோ- வெல்) பற்றி மேலும் அதிக விவரங்களை தெரிந்து கொள்ள www.jmshah.com என்ற வலைத்தளத்துக்கு வாருங்கள்.